பாடும் நிலா: எஸ்பிபிக்கு அடையாளமாய் மாறிய பாடல்!

படித்ததில் பிடித்தது:

உதய கீதம் படம். மோகன் சிறையில். ரேவதி அவரை விரும்புகிறார். பாடு நிலாவே.. தேன் கவிதை என பாடல் எழுதினேன். இதே வரியை மோகனும் பாடுவதாக எழுதினேன். இளையராஜா யோசித்தார். ரேவதி சிறைக்கு வெளியே இருக்கிறார். நிலவை பார்த்து பாடுவது பொருத்தம்தான்.

ஆனால் சிறைக்குள் இருக்கும் மோகன் பாடு நிலாவே என எப்படி பாடுவார். அவருக்கு நிலா தெரியாதே என்றார். நிலவொளி தெரியுமே என்றேன். இசைஞானி சமாதானம் ஆகவில்லை. யோசித்தோம். திடீரென அவர் முகத்தில் பரவசம். ஒரே ஒர் எழுத்தை சேர்ப்போம். பாடு நிலாவே என ரேவதி பாடட்டும். பாடு(ம்) நிலாவே என மோகன் பாடட்டும் என்றார். அருமை அண்ணா என உற்சாகமாக கை தட்டினேன்.

‘ம்’ என்ற ஓர் எழுத்து அர்த்தம் பொருந்தியது. ரேவதி நிலவை பார்த்து பாடுகிறார். மோகன் ரேவதியை முன்னிலைப்படுத்தி பாடுகிறார். பாடல் வெற்றி பெற்றது. இப்போது இன்னொன்று தோன்றுகிறது. அது இசைஞானிக்கே தெரியாது. பாடும் நிலா பாலு என எஸ்பிபி அழைக்கப்படுகிறார். அன்று ராஜா சேர்த்த மெய்யெழுத்து பாலுவின் அடையாளமாகி விட்டது.

− மு.மேத்தா

  • நன்றி: முகநூல் பதிவு

#Kavignar_Mu_Metha #கவிஞர்_மு_மேத்தா #இளையராஜா #Ilaiyaraaja #Paadu_Nilavae #பாடு_நிலாவே_பாடல் #பாடும்_நிலா #Udaya_Geetham #SPB #Janaki #மோகன் #ரேவதி #mohan #revathi #எஸ்பிபி #உதய_கீதம்

You might also like