அதிகரித்துவரும் தற்கொலைகள்: என்னதான் தீர்வு?

உச்சநீதிமன்றம் கேள்வி

அதிகரித்து வரும் தற்கொலைச் சம்பவங்களைத் தடுக்க, பொது சுகாதாரத் திட்டங்களை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் கௌரவ் குமார்பன்சால் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2018 வரை 18 வயதுக்குட்பட்ட 140 சிறார்கள் தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி காவல்துறையினா் வெளியிட்ட தரவுகளைச் சுட்டிக் காட்டியிருந்தார்.

அதோடு, இந்தியாவில் தற்கொலைச் சம்பவங்களைக் குறைப்பதற்கோ, தடுப்பதற்கோ அரசு பொது சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது மனநல சுகாதாரச் சட்டம் 2017-ல் உள்ள பிரிவுகள் 29 மற்றும் 115-ஐ மீறுவதாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தியது.

அப்போது, இது சமூகத்தில் நிலவும் முக்கியப் பிரச்சனை எனக் கூறிய சந்திரசூட் இதுதொடா்பாக ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டார். 

அதோடு, தற்கொலைகளைத் தடுப்பதற்கு பொது சுகாதாரத்திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்றும் அப்படியிருந்தால் அந்தத் திட்டத்தைப் பற்றி விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.

#உச்சநீதிமன்றத்_தலைமை_நீதிபதி #டி_ஒய்_சந்திரசூட் #இந்தியா #தற்கொலை #மனநல_சுகாதாரச்_சட்டம் #சுகாதாரத்_திட்டம் #உச்ச_நீதிமன்றம் #Supreme_Court_Chief_Justice #DY_Chandrachud #India #Suicide #Mental_Health_Act #Health_Scheme #Supreme_Court

You might also like