உயிர் வலியை உணர்வோம்!

சமீபகாலமாக காடுகள் அழிக்கப்படுவதாலும், வறட்சி, தண்ணீர் பற்றாக்குறைப் போன்ற காரணங்களாலும் காடுகளில் உள்ள யானைகள் உணவைத் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருகிறது.

அப்படி வரும் யானைகள் சில வழித்தடங்களில் வரும் ஆபத்துகளில் சிக்கிக்கொண்டு உயிரையும் விடும் சம்பவங்களும் அவ்வவ்போது நிகழ்கின்றன. இப்படி ஒரு நிகழ்வுதான் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்துள்ளது.

அண்மையில் கவுகாத்தி புறநகரில் உள்ள ஜாகிரோட் பகுதியில் அதிகாலை 5 மணியளவில் ஒரு யானை உணவு தேடி ரயில் தடம் வழியாக நடந்து வந்துள்ளது. அந்த சமயத்தில் அதிவேகமாக வந்த விரைவு ரயில் ஒன்று யானைமீது மோதியுள்ளது.

ரயில் அதிவேகமாக மோதியதால், யானையின் உடலிலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் யானை தட்டுத்தடுமாறி எழுந்துச்செல்ல முற்பட்டது.

ஆனால், நடக்க முடியாமல் தடுமாறி தண்டவாளத்திலேயே விழுந்து யானை உயிரிழந்தது. ரயில் மோதி யானை விபத்துக்குள்ளாகும் காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.

 

You might also like