எழுத்தென்பது நம்மை நாமே நேசிக்க வைக்கும் கண்ணாடி!

- எழுத்தாளர் இந்திரன்

ஆனந்த விகடனில் எழுத்தாளர் இந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும்:

கேள்வி:

“இந்திரன் 75” இந்தத் தருணத்தை எவ்வாறு உணர்கிறீர்கள்?

இந்திரன் பதில்:

ஒரு நாள் தேநீர் அருந்திக்கொண்டு இருக்கும் போது ரொட்டி ஒன்று வாங்கினேன். அதை ஒரு காகிதத்தில் வைத்துத் தந்தார்கள். சாப்பிட்டு விட்டு அதை தூக்கி எரிய முற்பட்டபோது, அந்தக் குப்பை எனக்கு தங்கமாக மாறியது.

அந்த தாளில் “மனிதன் இரண்டு இடங்களில் தான் மண்டியிட வேண்டும் ஒன்று தாயின் காலடியின் கீழே, இன்னொன்று சுனை ஊற்றின் தண்ணீரை அள்ளிப் பருகும்போது” என்று எழுதியிருந்தது. அதை வாசித்தவுடன் என்னுள் பல மின்னல்கள் எழுந்தன.

உடனே அந்த துண்டுச் சீட்டை எடுத்துக்கொண்டு எனது மாமாவைச் சந்திக்க ஓடினேன். “இந்தா பாருப்பா எப்படி எழுதி இருக்கான்” என்று ஆச்சர்யமாக காட்டினேன்.

அன்று இளமையில் எப்படி ஆச்சர்யமாக ஓடினேனோ இத்தருணத்திலும் அதேபோல கலையை ஓடி ஓடிப் பருகிக் கொண்டிருக்கிறேன். கலையை உருவாக்குவதும், அதை ரசிப்பதும் இப்போதும் எப்போதும் அதே மகிழ்ச்சியான உணர்வைத்தான் தருகிறது.

– நன்றி: ஆனந்த விகடன்

You might also like