வாழ நினைத்தால் வாழலாம்…!

திரைத் தெறிப்புகள்-3:

“பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்”.

1962-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் இடம்பெற்ற “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்” என்ற துவங்கும் பாடலில் வரும் வரிகள் தான் இவை.

வாழ்கையின் மீது நம்பிக்கை இழக்க எவ்வளவோ காரணங்களும் சந்தர்பங்களும், சூழ்நிலைகளும் நம்மைச் சுற்றி அமைந்தால்கூட இதற்கிடையிலும் நமக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு சிலர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நம்பிக்கையை மிக எளிய மொழிநடையில் இந்தப் பாடலில் தந்திருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

‘பலே பாண்டியா’ படத்தில் இந்தப் பாடல் வரிகளை பி.சுசீலாவின் இனிமையான குரலில் கேட்கும்போது எந்த மனிதர்குள்ளும் பசுமையான நம்பிக்கை துளிர் விடும். அப்படிப்பட்ட அற்புதங்களை நிகழ்த்தும் எளிமையும் கவித்துவமும் கலந்த பாடல் வரிகள் இவை.

You might also like