தயிர் கிட்டத்தட்ட அனைவராலும் உட்கொள்ளப்படுகிறது. மேலும் சிலர் இது பாலை விட உயர்ந்தது என்று கூட நம்புகிறார்கள்.
தயிர் இயற்கையிலேயே, அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள். கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி 12, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்டவைகள் தயிரில் மிக அதிகளவில் உள்ளன. இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
தவறான கலவையில் உட்கொண்டால் சத்தான உணவு கூட உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது தயிருக்கும் பொருந்தும்.
தயிரை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி தயிரையே, நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மாற்றக் கூடிய அந்த குறிப்பிட்ட உணவு வகைகள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
தயிர் வெங்காயம்
தயிரையும் வெங்காயத்தையும் ஒன்றாகச் சாப்பிடும்போது, அவை ஒவ்வாமை, வாயு, அமிலத்தன்மை மற்றும் வாந்தியை உண்டாக்குகின்றன.
காரணம், தயிர் குளிர்ச்சியை ஏற்படுத்தும், வெங்காயம் நமது உடலுக்கு வெப்பத்தை அளிக்கவல்லது.
இதன் விளைவாக, இந்த இரண்டு உணவுகளையும் இணைப்பது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
குறிப்பாக கோடையில் இந்த பழக்கம் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். பிரியாணி சாப்பிடும்போது சைடிஷாக அனைவரும் தயிர் வெங்காயம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் அது தவறான காம்பினேஷன்.
எனவே உங்களுக்கு தயிர் வெங்காயம் அல்லது ரைத்தா மிகவும் பிடிக்கும் என்றால், நீங்கள் உங்கள் உணவு பழக்கத்தை முதலில் மாற்றிக்கொள்வது மிகவும் நல்லது.
தயிர் வெங்காயம், தோல் அலர்ஜியை ஏற்படுத்தவல்ல உடல் அரிப்பு, எக்ஸிமா, சோரியாசிஸ் போன்ற குறைபாடுகளை நமது உடலில் ஏற்படுத்தி விடும்.
வெள்ளரி:
தயிரை வெள்ளரி உடன் சாப்பிடவே கூடாது. இதனால் சைனஸ் பிரச்னையுடன், இருமலும் வரலாம். தயிர் மற்றும் வெள்ளரி இரண்டும் குளிர்ச்சியான விளைவைக் கொண்டிருக்கின்றன. இது இருமல் மற்றும் சைனஸ் பிரச்னைகளை அதிகரிக்கும்.
தயிர் மற்றும் மீன்:
தயிர் மற்றும் மீனின் கலவையும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது அஜீரணம் மற்றும் வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
இதன் விளைவாக, தயிர் சாப்பிடும் போது, அதே நேரத்தில் மீன் சாப்பிடுவதை தவிர்க்கவும். அவற்றின் நன்மைகள் இருந்தபோதிலும், ஒன்றாக உட்கொண்டால், மீன் மற்றும் தயிர் உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது தோல் பிரச்சினைகளை கூட உருவாக்கும்.
மாம்பழம் மற்றும் தயிர்:
மாம்பழம் உடலுக்கு சூட்டைக் கொடுக்கும். அதேசமயம் தயிர் குளிர்ச்சியை அளிக்கிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்வதால் தோல் பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்படலாம். இதனாலேயே மாம்பழத்தை தயிருடன் சாப்பிடக்கூடாது.
உளுத்தம் பருப்பு:
உளுத்தம் பருப்பு உங்கள் உடலில் ஒரு சூடான விளைவைக் கொண்டிருக்கிறது. எனவே, அதனுடன் தயிரை உட்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது வீக்கம், வாயு மற்றும் அமிலத்தன்மை, அத்துடன் தளர்வான இயக்கத்தை ஏற்படுத்தும்.
தயிர் மற்றும் பால்:
தயிர், நாம் அனைவரும் அறிந்தபடி, பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், அவற்றை இணைத்து சாப்பிடுவது நமது செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் வாயு, அமிலத்தன்மை மற்றும் வாந்தி கூட ஏற்படலாம்.
எண்ணெய் உணவுகள்:
நெய் தடவப்பட்ட புரோட்டா, சால்னா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அந்தளவுக்கு அதன் சுவை நம்மை எல்லாரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது.
எண்ணெய் மிக்க உணவுகள் உடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து சாப்பிடும் போது, அது செரிமானத்தை தாமதப்படுத்துவது மட்டுமல்லாது, நம்மை விரைவில் சோர்வு அடைய செய்துவிடுகிறது.
இதன் காரணமாகவே, எண்ணெய் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட்ட பிறகு, லஸ்ஸி போன்ற பானங்களை குடிக்கும்போது, வெகுவிரைவில் உறக்கம் நம்மை தழுவிக்கொள்வதற்கான காரணமும் இதுவே ஆகும்.
வறுத்த உணவு:
தயிரின் தன்மை புளிப்பாக கருதப்படுகிறது. வறுத்த உணவு கனமானது மற்றும் ஜீரணிக்க நேரம் எடுக்கும். இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் ஏற்படுவதோடு, உடலுக்கும் பல பாதிப்புகள் ஏற்படுத்தும்.
சுத்திகரிக்கப்பட்ட உப்பு:
பலர் தயிரில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுகிறார்கள். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் வயிற்றில் இருக்கும் பாக்டீரியாவைக் குறைக்கிறது.
இது குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், தயிரை அப்படியே சாப்பிடுங்கள். அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்கவும்.
இறைச்சி:
இறைச்சியுடன் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இறைச்சியில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. தயிரில் கால்சியம் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் செரிமானத்தில் சிரமம் ஏற்படும். செரிமான அமைப்பை இது மோசமாக்கலாம்.
நன்றி : வேல்ஸ் மீடியா இணைய இதழ்