உள்ளத்தால் உயர்ந்த சாதனைத் தம்பதி!

பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா (வயது 31) மற்றும் கட்யூசியா லீ ஹோஷினோ ஆகியோர் கடந்த 2006-ல் ஆன்லைன் மூலம் அறிமுகம் ஆகினர். 18 ஆண்டுகளாக பழகி வரும் இவர்கள் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இதன்மூலம் உலகின் மிகவும் குள்ளமான தம்பதியர் என்ற கின்னஸ் சாதனையை இவர்கள் இருவரும் படைத்தனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட பதிவில், நாங்கள் உயரத்தில் குறைவானவர்க ளாக இருக்கலாம். ஆனால் இதயத்தில் அதிகமான அன்பை கொண்டுள்ளோம்’ என குறிப்பிட்டு உள்ளனர். இந்த தம்பதியினருக்கு லட்சக்கணக்கானோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

You might also like