தமிழிசையின் எதிர்வினையும் அண்ணாமலையின் சந்திப்பும்!

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற மேடையில், அமித் ஷாவுக்கும் முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையிலே நடந்த பேச்சுவார்த்தை வெவ்வேறு விவாதங்களுக்கு வழிவகுக்கிற விதத்தில் அமைந்தது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், இரு நாட்களுக்கு முன்பு தமிழிசை தன் டுவிட்டர் பக்கத்தில், அந்த சந்திப்பு குறித்தும் அந்த சந்திப்பில் எந்தவிதமான தொடர்பு சிக்கலோ இல்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதற்கு அடுத்து நடந்ததுதான் ஆச்சரியமான ஒன்று. தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜனின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.

இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ‘தமிழிசை அக்கா’வைப் பற்றியும் அவர் கட்சிக்கு ஆற்றிய பணிகள் பற்றியும் மிகவும் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

தலைமை வற்புறுத்தல் காரணமாக அண்ணாமலை தமிழிசையின் வீட்டிற்குச் சென்று சந்தித்து இத்தகைய விளக்கத்தை கொடுக்க வேண்டி இருந்ததா? அல்லது அவரே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோணத்தில் தமிழிசையை சந்தித்தாரா என்பதெல்லாம் அடுத்தடுத்து எழும் கேள்விகளாக நீடித்துக் கொண்டிருக்கின்றன.

தேர்தலுக்குப் பிறகும் தன்னுடைய இயக்கத்தை எப்போதும் ஊடகங்களில் அடிபடும் அளவிற்கு சுறுசுறுப்பாகவே வைத்திருக்கிறார்கள், தமிழகத்தின் தற்போதைய பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜனும்.

கட்சிக்குள் தான் எப்படி ஒரு தேசிய ஒற்றுமை!

You might also like