“ஒரு உண்மையான சேவகர், வேலை செய்யும்போது கண்ணியமான நடத்தையைப் பராமரிக்கிறார். கண்ணியத்தைக் கடைப்பிடிப்பவர் தனது வேலையைச் செய்கிறார்.
‘இதை நான் செய்தேன்’ என்ற அகங்காரம் இல்லை. அத்தகைய நபருக்கு மட்டுமே சேவகர் என்று அழைக்கப்பட உரிமை உண்டு. உண்மையான சேவகர்கள் தம்பட்டம் அடிக்க மாட்டார்கள். அவர்களிடம் ஆணவம் இருக்காது.
தேர்தல் என்பது யுத்தம் அல்ல, பலத்தை எல்லாம் காட்டி ஆக்ரோஷமாக தேர்தல் களத்தில் செயல்பட வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல் பிரச்சாரத்தில் கண்ணியமும், நாகரிகமும் அவசியம். இந்தத் தேர்தலில் அவை பின்பற்றப்படவில்லை.
கண்ணியத்தைக் கடைப்பிடிப்பவரே உண்மையான மக்கள் சேவகர்.
மக்கள் பணி செய்பவரையே, அந்தப் பணி செய்யும் தலைவனை சேவகன் என்கிறோம். நான் சொல்வது மட்டுமே உண்மை. அதுமட்டுமே செல்லுபடியாகும் என்பது முற்றிலும் தவறான அணுகுமுறை.”
14.06.2024 தேதியிட்ட முரசொலி தலையங்கத்தில் இருந்து ஒரு பகுதி.
நன்றி: முரசொலி