பாலையா: முதலில் ஹீரோ, பிறகு வில்லன்!

மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் பாலையாவை கதாநாயகனாக அமர்த்தி ‘சித்ரா’ என்ற படத்தை இயக்கித் தயாரித்தார்.

அந்நாளைய பிரபல நடிகை கே.எல்.வி.வசந்தா கதாநாயகி. இதில் பாலையா தனது சொந்தக் குரலில் ‘எந்தன் மனவாசமே’ என்ற காதல் பாடலும் பாடியிருந்தார். ஆனால் படம் தோல்வி கண்டது. பிறகு? மீண்டும் வில்லன் ஆனார். புகழ்மிக்க வில்லன் ஆனார்.

அதன்பின்னர், 1946-ல் ‘வால்மீகி’ படம் (ஹொன்ஸ்பா – டி.ஆர்.ராஜகுமாரி)

1947-ல் ‘கடகம்’ ‘ராஜகுமாரி’ (எம்.ஜி.ஆர் முதன் முதல் கதாநாயகனாக நடித்தபடம்)

1948-ல் செண்பகவல்லி, பிழைக்கும் வழி, மோகினி, மாரியம்மன் ஆகிய படங்களில் பாலையா வில்லன் வேடம் ஏற்றிருந்தார்.

இதில் ‘மோகினி’  – எம்ஜிஆர், வி.என்.ஜானகி இணைந்து நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஆர்.சி.சம்பத் எழுதிய ‘திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள்’ என்ற நூலில் இருந்து…

You might also like