அறிஞர் அண்ணா முதன் முதலாக அமெரிக்கா செல்கிறார். அந்தச் சமயம் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனைக் (SSR) கூப்பிட்டனுப்பி, “நீ சினிமாவில் கோட்டெல்லாம் போட்டு நடிப்பியே, அதில் ஒன்று எடுத்து வா, என் சைசுக்கு ஆல்ட்டர் பண்ணி தைத்துக்கலாம்” என்று கூறியுள்ளார்.
அதற்கு எஸ்.எஸ்.ஆர், “பழசெல்லாம் வேண்டாம் அண்ணா. புது கோட்டு எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறியதும், “வேண்டாம்பா, அமெரிக்கா போயிட்டு வந்ததும் அப்புறம் எதுக்கு கோட்டு” என்று கூறியுள்ளார்.
ஆனால் எஸ்.எஸ்.ஆர் விடவில்லை. டெய்லரை அனுப்பி, அளவெடுத்து புது கோட்டுகளை தைத்து, வாங்கிக் கொண்டுபோய் அண்ணாவிடம் கொடுத்ததோடு, அவரே அண்ணாவுக்கு கோட்டு, டையெல்லாம் கட்டிவிட்டு அழகு பார்த்துள்ளார்.
தகவல்: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு
#எஸ்_எஸ்_ஆர் #அறிஞர்_அண்ணா# எஸ்_எஸ்_ராஜேந்திரன் #s_s_r #arignar_anna #anna #s_s_rajendren