இருபதாம் நூற்றாண்டில் உலகையே கிடுகிடுக்க வைத்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி தான் பங்கேற்ற 61 குத்துச்சண்டை போட்டிகளில் 56 போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தவர். இதில் 37 போட்டிகளில் எதிராளிகளை நாக் அவுட் செய்து வாகை சூடினார்.
குத்துச்சண்டை களத்தில் வெல்ல முடியாத மாவீரனாகத் திகழ்ந்த இவர், ஒலிம்பிக்கிலும் அமெரிக்காவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
ஆனால் பதக்கம் வென்ற பிறகும் நிற வேற்றுமையால், ஓட்டலில் தனக்கு வெள்ளைக்கார சர்வர் உணவை சப்ளை செய்ய மறுத்ததால், கோபத்தில் ஒலிம்பிக் பதக்கத்தை ஓஹியோ ஆற்றில் வீசினார்.
இதைத்தொடர்ந்து இஸ்லாமியராக மதம் மாறி தனது பழைய பெயரான ‘காஸியஸ் க்ளே’வையும் முகமது அலி என மாற்றிக் கொண்டார். இனவெறிக்கு எதிராக போராட்டக் களத்தில் குதித்தார்.
குத்துச்சண்டை களத்தில் முகமது அலி விட்டுச் சென்ற பாதையில் இருந்து பயணத்தைத் தொடர, அவரது பேரனும் களத்தில் குதித்திருக்கிறார்.
முகமது அலியின் மகள் ரசீதா அலியின் மகனான நிகோ அலி, லாஸ் வேகாஸ் நகரில் வளர்ந்து வருகிறார்.
தாத்தாவால் ஈர்க்கப்பட்ட அவர், தனது 4 வயது முதல் குத்துச்சண்டை போட்டிகளில் பயிற்சி பெற்று வருகிறார்.
– பிரேமா நம்பியார்
#காஸியஸ்_க்ளே #முகமது_அலி #நிகோ_அலி_வால்ஷ் #குத்துச்சண்டை_வீரர்_முகமது_அலி #Cassius_Clay #Muhammed_Ali #Nico_Ali_Walsh #Boxer_Muhammad_Ali #Muhammad_Ali_Memorial_Day