இயல்பை இயல்பென்றே சொல்லிப் பழகுவோம்!

உலகப் புகழ்பெற்ற, பல கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்த அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன், 1910-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி, நியூயார்க் டைம்ஸ் என்னும் இதழுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார்.

அந்தப் பேட்டியில் கடவுளின் கருணை பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் சிரித்துக் கொண்டே சொன்னார், “இன்று மதியம் நல்ல மீன் உணவு எனக்குக் கிடைத்தது. அது கடவுளின் கருணை என்று கொண்டால், நான் உண்ட மீனையும் கடவுள்தான் படைத்திருக்க வேண்டும். அந்த மீனிடம் கடவுள் காட்டிய கருணை என்ன?” என்று கேட்டுச் சிரித்தார்.

பிறகு அவரே சொன்னார். “கடவுள் என்று ஒன்றும் இல்லை… எல்லாம் இயற்கைதான். இயற்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இயற்கைக்குக் கருணையோ, கொடூரத் தன்மையோ கிடையாது. இயற்கை தன் போக்கில் செயல்களைச் செய்து முடிக்கிறது என்றார் எடிசன்.

“ஒரு மலர் இயல்பாக பூத்து குலுங்கி முதிர்ந்து உதிர்வது போல்தான் இயற்கை, வாழ்க்கை ஆனால் கடவுள், பக்தி – என்ற பெயரால் மனிதன் அதை திருகி, பிடுங்கி, கசக்கி சுகம் காண்கிறார்.

இயற்கையை இயற்கையாக இருக்க விடுங்கள். இயல்பை இயல்பு என்றே சொல்லி பழகுங்கள்” என்றார்.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like