பன்முகப்பார்வை கொண்ட மார்க்சீயவாதி!

பொதுவுடைமைப் போராளி, தோழர் தா.பாண்டியனின் 92-வது பிறந்த தினம் இன்று (மே-18).

தா.பாண்டியன் – சீரிய சிந்தனையாளார். தமிழகத்தின் மொழி, இன வரலாறு குறித்த பண்பாட்டு தரவுகளை சமூகவியல், அறிவியல் மற்றும் மானுடவியல் அடிப்படையில் பகுத்தாய்ந்து உணர்ந்த கற்றறிந்த அறிஞர்.

மார்க்சிய பின்புலம் அவருக்கு மிக சரியான தர்க்கவியல் பார்வையை அளித்திருந்தது. அளப்பரிய ஆங்கிலப் புலமை அவருக்கு பல நூலகளை வாசிப்பதற்கு அடித்தளமாக அமைந்திருந்தது.

அரசியல், பொருளாதாரம் குறித்து நன்கு கற்றறிந்த மேதை. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தங்கு தடையின்றி சரளமாக உரையாற்றும் வல்லமை கொண்டவர். அவரது பாராளுமன்ற பணிகளை நாடறியும்.

இவரை போல் பன்முகப் பார்வை கொண்ட மார்க்சியவாதிகள் இன்று மிகவும் குறைவு.

இவரது வாழ்க்கைப் பயணத்தை இன்றைய இளைஞர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவரது நூல்களை, கட்டுரைகளை வாசிக்க வேண்டும்.

இவரது உரைகள் இன்று இணையத்தில் உள்ளது.. அவற்றை கேட்கும் போதெல்லாம் புதிய கற்றலை உணர முடியும்.

– தமிழ் பாலன்

You might also like