இன்றைய நாள் சென்னை சோழமண்டல ஓவியர்கள் கிராமத்தில் இனிய நாளாக அமைந்தது. பாண்டிச்சேரியைச் சார்ந்த கே.கே. சேகர், அவரது மகள் ஸ்ரீதளாதேவி ஆகியோர் இணைந்து, மகளிர் தினத்தையொட்டி இந்தியா முழுக்க 67 பெண்களின் ஓவியக் கண்காட்சியை மிக சிறப்பாக தேசிய அளவில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் பலர் இதில் கலந்து கொண்டது மிகவும் பாராட்டுக்குரியது.
பெண்கள் ஓவியக் கலையில் முன்னோடிகளாக உள்ளனர். சோழமண்டல ஓவியர் கிராமம் பல ஆண்டுகளாக அங்கு இயங்கி வருகின்றது.
ஓவியர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு கிராமமாக வாழ்ந்து வருகின்றார்கள். அங்கே அவர்கள் முழு நேரமும் ஓவியம் தீட்டுவதும் சிற்பம் வடிப்பதும் அதை காட்சிப்படுத்துவதுமாக இருந்து வருகின்றார்கள்.
இந்த கிராமத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறை ஓவியர்கள் இங்கே அவர்களுடைய ஓவியங்களை பார்வைக்கு காட்சிப்படுத்தியுள்ளது மிகவும் அற்புதமான செயல்.
ஒருசில ஓவியர்களின் ஓவியங்கள் விடுபட்டுள்ளது. அவர்களது படைப்பும் இடம்பெற்றிருந்தால் முழுமைபெற்றிருக்கும். பல நாடுகளில் இந்த ஓவியக் கிராமம் மிகவும் பரிச்சியமானதாக இருந்து வருகின்றது.
திரு கே.சி.எஸ் பணிக்கிர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த கிராமம், இன்று மிகவும் சீரும் சிறப்புமாக கலைக்கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு சிறப்பாக உள்ளது.
இந்த கலைக்கூடத்தில் இடம்பெற்றிள்ள ஓவியர்களின் ஓவியங்கள், இந்த கிராமத்தில் தங்கியிருக்கவில்லை என்றாலும் தமிழகத்தில் தலைசிறந்த மற்ற ஓவியர்களின் கலைஞர்களின் படைப்புகளையும் அங்கே காட்சிப்படுத்தியுள்ளது. தென்னிந்திய நவீன ஓவிய சிற்பக் கலையின் ஒரு உச்சத்தை அங்கே காண முடியும்.
திருவாளர்கள் தனபால், கிருஷ்ணாராவ், முனுசாமி, பிவி ஜானகிராமன், தக்ஷணாமூர்த்தி, முருகேசன், அல்பான்ஸோ, சந்தானராஜ், சீனிவாசலூ, எஸ்.கே ராஜவேலு, ஆதிமூலம், ரெட்டப்ப நாயுடு, சுல்தான் அலி, சேனாதிபதி, வெங்கடபதி, கோபால், நந்தன், நந்தகோபால், டக்ளஸ் போன்ற மிகவும் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் அங்கே காட்சிப்படுத்தியுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அங்கே சென்றதால் மிகவும் ஒரு உற்சாகமான மனநிறைவு கிடைத்தது.
நன்றி: ஓவியர் கோவிந்தன் முகநூல் பதிவு