படித்ததில் ரசித்தது:
மனித குல வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு மகத்தானது. வேறு எந்தக் கருவியை விடவும் புத்தகம் வழியே தான் மனிதன் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறான். வளர்ச்சி அடைந்திருக்கிறான். உலகை மாற்றியிருக்கிறான்.
ஒவ்வொரு புத்தகமும் வாசிப்பவனை உருமாற்றுகிறது. சிறகு முளைக்க வைக்கிறது. ஒரே நேரத்தில் வேறு வேறு காலங்களில் பிரவேசிக்கவும் வாழவும் கற்றுத் தருகிறது. வாழ்வின் மீது பெரும்பிடிப்பை ஏற்படுத்துகிறது!
– எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்