வன உரிமைச் சட்டமும் மக்களின் வாழ்வாதரமும்!

VTMS எம்.எஸ்.செல்வராஜ்

வன உரிமைச் சட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கடந்த 11/ 03/2024 அன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம் (VTMS) புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு, வாழ்வு மற்றும் சுய மரியாதைக்கான பிரச்சாரம் ஏற்பாடு செய்தது.

இதற்கு VTMSன் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.எம்.எஸ்.செல்வராஜ் தலைமை வகிக்க, தமிழ்நாடு பழங்குடிகள் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் திரு.வி.பி.குணசேகரன் முன்னிலை வகித்தார்.

கன்னியாகுமரி, திருவாரூர், நீலகிரி, ஈரோடு, கோயம்பத்தூர், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் வன உரிமைச்சட்டம் 2006 நடைமுறைப்படுத்தும் பணியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றனர் .

ஆய்வுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி முழுமையாக விவாதிக்கப்பட்டு செயல்திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

புலிகள் காப்பகம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பாரம்பரியமாக வாழும் பழங்குடிகளையும், வனம் சார்ந்து வாழும் மைடான செட்டி மக்களை வெளியேற்றி மறுவாழ்வு செய்கிறோம் என்ற பெயரில் அரசு ஒதுக்கிய சுமார் 8 கோடி ரூபாய் ஒதுக்கியது.

இத்திட்டத்தை செயல்படுத்திய வனத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நில புரோக்கர்கள் இணைந்து ஏமாற்றிஉள்ளனர் .இது தொடர்பான வழக்குகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கால்நடை மேய்ச்சல் சமூகம்

தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பாரம்பரிய (கால்நடைகள்) பல இன மாடுகள் மிக முக்கியமானதாகும்.

இந்த லட்சக்கணக்கான கால்நடைகள் இயற்கையாக வனப்பகுதியில் பாரம்பரியமாக மேய்ச்சலில் ஈடுபடுகின்றது. இதனால் சுற்றுச்சூழல் சமன்பாடு, மனித வனவிலங்கு மோதல், காட்டுத்தீ, காடுகளை வளமாக்குவது போன்ற பல நன்மைகளை செய்கின்றது.

இந்த கால்நடைகள் மேய்ச்சலில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஈடுபடுவதோடு மேய்ச்சலே வாழ்வாதாரமாக உள்ளது.

சட்டத்துக்கு புறம்பாக உயர் நீதிமன்ற நீதிபதி உள்நோக்கத்தோடு தவறான தீர்ப்புகளால் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலும் கடற்கரையும்

கடலும், கடற்கரையும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரமாக உள்ளது. கடலோடு இணையும் ஆறுகளின் முகத்துவார பகுதிகள், அலையாத்திக் காடுகள் உள்ளதோடு பவளப்பாறைகள், தீவுகள் மீன்வளத்துக்கும், உயிர் இனங்கங்களின் உற்பத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இவை அனைத்தும் மீனவர்களின் அதிகாரத்தின் கீழ் பாரம்பரியமாக இருந்துள்ளது.

சமீபகாலங்களில் சுனாமிக்கு பின் வனத்துறையினர் எந்தவித முன் அறிவிப்பும் வெளிப்படையாக கொடுக்காமல் காப்புக்காடாக மாற்றி பாரம்பரிய மீனவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளை கொடுப்பதோடு, சட்டவிரோத செயலில் ஈடுபடுகின்றனர்.

இதனால் சொல்லொண்ணா துயரங்களை மீனவர்கள் அனுபவித்து வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கடற்கரை தீவுகளை சுற்றுலா தளமாக மாற்றுவது, செயற்கை இறால் பண்ணை, இரசாயன கெமிக்கல் தொழிற்சாலைகள் என பல சவாலை மீனவர்கள் சந்திக்கின்றனர்.

டேன்டீ

இந்திய வம்சாவழி மலையக தமிழர்களின் மறுவாழ்வுக்காக 1968 ஆம் ஆண்டு “தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்தை”(டேன்டீ) அரசு தொடங்கி 6500 குடும்பங்களை குடியமர்த்தினர்.

இந்த தொழிலாளர்கள் தங்களது உதிரத்தையும், வேர்வையையும் சிந்தி தேயிலை தோட்டங்களை உருவாக்கி பல ஆயிரம் கோடிகளை அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஈட்டி கொடுத்தனர்.

தற்போது அரசு அந்த அழகான தேயிலைத் தோட்டங்களை காடாக மாற்றி அந்த குடும்பங்களை வெளியேற்ற முயற்சி செய்கின்றனர்.

வாழ்வாதாரத்தை இழக்கும் இம்மக்களுக்கு டேன்டீ நிலத்தை தலா மூன்று ஏக்கர் வீதம் பிரித்து கொடுத்து வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வன உரிமைச் சட்டம்

வனம் என்று சொல்லப்பட்ட அனைத்து இனத்தவர்களின் நில உரிமை, சமூக உரிமை, எல்லைகளை தீர்மானிக்கும் உரிமைகள் சட்டப்படி செய்து கொடுக்க வேண்டும்.

இது நடைபெறவில்லை. ஏராளமான சட்ட விரோத செயல்கள் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புள்ளிவிவரங்கள், எதிர்கால செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

மேற்கண்ட பிரச்சனைகள் தொடர்பாக சமூக செயல்பாட்டாளர் திரு.சி.ஆர்.பிஜோய், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தலைவர் திரு.கபிலன், விடிஎம்எஸ்-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.எம்.எஸ்.செல்வராஜ், தமிழ்நாடு பழங்குடிகள் மக்கள் சங்கத்தின் தலைவர் திரு.வி.பி.குணசேகரன், CPI மாவட்டச் செயலாளர் திரு.மோகன்குமார், தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பின் தலைவர்கள் திரு.ராஜிவ்காந்தி, திரு.வேல்முருகன்,

கடலோர மீன் கூட்டமைப்பின் தலைவர் திரு.லோகநாதன், மச்சூர் விவசாய சங்கத்தின் தலைவர் திரு.பாண்டியன் தொங்குடிகள் அமைப்பைச் சேர்ந்த சோபா,கீஸ்டேன் திரு பகவான்நிதி, WWF திரு.அஜய், டேன்டீ மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு முன்னணி தலைவர் திரு.விஜயசிங்கம், மேலும் பலர் வன உரிமை சட்டம் தொடர்பாகவும், எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சவால்கள், பற்றி விரிவாக பேசினர்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு வன உரிமை சட்டத்தை முறையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டது.

*அதிகாரிகள் மீது நடவடிக்கை

*இதில் சட்டவிரோதமாக செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது பிரிவு 7,8ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

*மாநில குழு:  மாநில அளவில் FRA சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு குழு அமைப்பது, நிதி ஒதுக்குவது பற்றி வலியுறுத்துவது.

மதுரையில் விரிவான மாநாட்டினை நடத்துவது.

கூட்டமைப்பு:

கூட்டத்தில் கலந்துகொண்ட 10க்கும் மேற்பட்ட அமைப்புகளை கூட்டமைப்பாக இணைத்து எதிர்கால செயல்பாடுகளை திட்டமிடுவது என முடிவு செய்யப்பட்டது.

தீர்மானங்கள்

1) வனத்துறையின் பல்வேறு நடவடிக்கைகள், அறிவிப்புகள், உத்தரவுகள், சட்டங்கள் ஆகியவை வனம் மற்றும் கடலோரத்தில் வாழும் பழங்குடிகள் மற்றும் இதர பிரிவு மக்களின் பாரம்பரிய உரிமைகளை பறித்து வருகிறது. அம்மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு வருகிறது.

2) முதுமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 900 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, உரிய ‌நிவாரணம் மோசடி செய்யப்பட்டும் மக்கள் ஏமாற்றப்பட்டு தங்களின் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகிறார்கள்.

3) சென்னை உயர்நீதிமன்றம் வன சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள் ஆகியவற்றில் கால்நடை மேய்ச்சலுக்கு விதித்துள்ள தடையால் மேய்ச்சல் சமூகம் மட்டுமின்றி கால்நடைகளும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

4) கடலில் உள்ள தீவுகள் மற்றும் கடற்கரைபகுதிகளை வனத்துறை காப்புக் காடுகள் மற்றும் சரணாலயங்களாக அறிவித்து வருவதால், பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

5) நீலகிரியில் ‘டேன்டீ’ தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முயற்சி பல்லாயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைக்கிறது.

6) ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதி, வன விலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரியவகை பர்கூர் மறை மாட்டினம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது; வன உரிமை சட்டப்படி பழங்குடியினர் கிராம சபைகளின் மூலம் அனுப்பப்பட்ட சமூக வன உரிமை கோரிக்கைகள், ஆண்டுக்கணக்கில் தீர்வு காணப்படாமல் உள்ளன.

7) வனம் மற்றும் வனம் சார்ந்து வாழும் மக்களின் பாரம்பரிய வன-நில உரிமைகளை அங்கீகரிக்கும், 2006 வன உரிமைச்சட்டம் தமிழ்நாட்டில் முழுமையாக அமலாக்கப்படாததே இப்பிரச்சனைக்கு பிரதான காரணமாக உள்ளது.

8). வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பழங்குடியினர் நலத்துறையின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 17 ஆண்டுகளுக்கு மேலாகியும் அமலாக்கம் தமிழ்நாட்டில் பரிதாபகரமான நிலையிலேயே உள்ளது.

9). தமிழ்நாடு அரசு, வன உரிமை சட்டத்தை முழுமையாக அமலாக்க குறிப்பிட்ட காலவரையரையை நிர்ணயிப்பதோடு, சட்டத்தை அமலாக்குவதில் அனுபவமும் பயிற்சியும் பெற்றவர்களை கொண்ட ஒரு தனிக்குழுவையும் அமைக்க வேண்டும் என இக்கூட்டம் கோருகிறது.

10). இச்சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கும் போதுமான அழுத்தத்தை அளிக்கும் வகையிலும், இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

#புலிகள்_காப்பகம் #மக்கள்_வாழ்வுரிமைக்_கூட்டமைப்பு #கால்நடைகள் #இயற்கை #வனப்பகுதி  தொழிலாளர்கள் #விவசாயிகள்_தொழிலாளர்கள்_முன்னேற்றச்_சங்கம்

You might also like