நாடாளுமன்றத் தேர்தல்: ஏப்-19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு!

இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு:

ஏப்ரல் 19ல் நடைபெறும் முதல்கட்ட வாக்குப் பதிவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் அட்டவணைப்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்களிக்கும் மக்கள், தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுடன், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27ம் தேதி ஆகும்.

வேட்பு மனு பரிசீலனை மார்ச் 28ம் தேதி அன்று நடைபெறுகிறது. வேட்பு மனுவைத் திரும்பப் பெற  கடைசிநாள் ஏப்ரல் 19.

ஜூன் 4-ம் தேதியன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

கர்நாடகா மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு இரண்டாம் கட்டத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஐந்தாம் கட்டத்திலும், நாட்டின் அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு ஏழாம் கட்டத்திலும் வாக்குப் பதிவுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்: 

முதற்கட்டம் – ஏப்ரல் 19, 2024

2ம் கட்டம் – ஏப்ரல் 26, 2024

3ம் கட்டம் – மே 07, 2024

4ம் கட்டம் – மே 13, 2024

5ம் கட்டம் – மே 20, 2024

6ம் கட்டம் – மே 25, 2024

7ம் கட்டம் – ஜூன் 01, 2024

You might also like