ஜாபர் சாதிக் கைது: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை!

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24-ம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாஃபர் சாதிக் என்பது தெரியவந்தது.

அதோடு, கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில் அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது.

தொடர்ந்து ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

#திமுக #ஜாஃபர்_சாதிக் #துரைமுருகன் #மத்திய_போதைப்பொருள்_தடுப்புத்துறை #போதைப்பொருள்_தடுப்பு_பிரிவு #jaffer_sadiq_arrest #NCP
#போதைப்_பொருள்_கடத்தல் #ஜாபர்_சாதிக் #டெல்லி #என்சிபி #Delhi #NCP #Jaffer_Sadiq

You might also like