நூல் அறிமுகம்:
“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பார்கள். உயர்ந்தவர்கள் என்பவர் தமது உயிரையும் வாழ்வையும் பொருட்படுத்தாமல் மனிதகுலம் முழுமையும் நலமாக வாழ வழிகாட்டுபவர்கள். அவர்கள் உலகத்தின் ஒளிச்சுடர்களாக உலகத்தையே புரட்டிப் போட்ட நெம்புகோல்களாக திகழ்கிறார்கள்.
இன்றைய மக்கள் பல்வேறு கருவிகளையும், பொருள்களையும் பயன்படுத்திச் சுகமாகவும் வளமாகவும் நலமாகவும் வாழ்கின்றனர் என்றால் அதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த அறிவியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் என்னும் இவர்களை நாம் மறந்துவிட முடியாதல்லவா!
அப்படிப்பட்ட மனிதகுல மாணிக்கங்களாகத் திகழ்கின்ற அறிவியல் மேதைகளுள் பன்னிருவர் வரலாற்றினைத் தொகுத்து உலக விஞ்ஞானிகள் என்னும் நூலாகத் தந்துள்ளார் திரு.சி.பி. சிற்றரசு அவர்கள்.
செய்திகளை முழுமையாக உணர்ந்து கிரகித்துக் கொண்டு, சமுதாயத்திற்குத் தேவையானவற்றைச் சுருக்கித் தருகின்ற கைவண்ணம் உடையவர் அவர். இந்நூலை அவருடைய கைவண்ணத்திற்கு மற்றொரு சான்று எனலாம்.
நூல்: உலக விஞ்ஞானிகள்
ஆசிரியர்: சி.பி.சிற்றரசு
கௌரா பதிப்பக குழுமம்
பக்கங்கள்: 80
விலை: 60.00