முதுமை இனிக்க இந்திரன் சொல்லும் பத்து விதிகள்:
1) உங்கள் வயதைக் காட்டி உங்களை உயர்த்திக்கொள்ள நினைக்காதீர்கள்.
2) நாம் இல்லாமல் பிள்ளைகள் என்ன ஆவார்களோ என்றுகவலைப்படாதீர்கள்.
3) நீங்கள் இல்லாமலும் உலகம் இயங்கும். தினந்தோறும் சந்தோஷமாய் இருப்பதை கடமை போல் நிறைவேற்றுங்கள்.
4) வயது ஏற ஏற உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விடுவார்கள். அவர்கள் மேல் பொறாமை படாமல், போட்டி போடாமல் அவர்கள் மேலும் முன்னேற உங்கள் அனுபவத்தைக் கொடுங்கள்.
5) முதுமையில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் மறையத் தொடங்குவார்கள். அவர்களோடு உங்கள் வாழ்க்கை முடிந்து விட்டது என்று கருதாதீர்கள்.
6) தனிமையில் உங்களை நீங்களே கவனித்து தனிமையில் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். முடிந்தவரை உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள்.
7) வயது ஏற ஏற புதிய புதிய நோய்கள் வரும். புலம்பாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுறுசுறுப்பாக இருங்கள். ஓய்ந்து படுத்துவிடாமல் உடலுக்கு நிறைய வேலை கொடுங்கள். அதுவே உடற்பயிற்சியும் ஆரோக்கியமும்.
9) படுக்கையில் இருக்க வேண்டிய நிலைமை வரும்போது உங்களுக்கு சேவை செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.
10) அடுத்த பிறவி, சொர்க்கம், நரகம் பற்றி அட்வான்ஸ் புக்கிங் பண்ணாமல் தற்காலத்திலேயே சந்தோஷத்தை அனுபவியுங்கள்.