நூல் அறிமுகம்:
நெறிப்படுத்தப்பட்ட மனநிலையில் தன் அனுபவங்களையும் எண்ணத் தெறிப்புகளையும் எளிய நடையில் வானொலியில் தாம் பேசிய கருத்துகளை சுவையானதாக்கித் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் த.ஸ்டாலின் குணசேகரன்.
தேசபக்தி, நன்றியறிதல், மனிதாபிமானம், தேசத் தலைவர்கள், தியாகிகள், சமூக மனநிலை, மக்களின் பொறுப்புணர்ச்சி, அக்கறை, போற்றத்தக்க குணாம்சங்கள் என்று சகல திசைகளுக்கும் இட்டுச்செல்கின்றன இக்கட்டுரைகள்.
ஒவ்வொன்றும் தனித்த சிறப்பு கொண்டிருந்தாலும் அத்தனையும் மனித மாண்புகளையும் அதன் உன்னதத்தையும் உயிர்ப்பையும் மையமாகக் கொண்டு சமூகப் பண்பாட்டு அக்கறையை வெளிப்படுத்துபவை.
வானொலியில் தொடர்ந்து செவிமடுத்த நிகழ்ச்சிதான் என்றாலும், அந்த சிற்றுரைகளை திரும்பவும் நூல் வடிவில் வாசித்த போது…
ஆகா! முத்துக்குளித்த அனுபவம்தான்.
அத்தனையும் முத்துக்கள், வெற்றுச்சிப்பிகள் ஏதும் இல்லை!
– க.பொ.சீநிவாசன், கூடுதல் தலைமை இயக்குநர் (ஓய்வு),
அகில இந்திய வானொலி (தென் மண்டலம்),
சென்னை
*****
நூல்: மெய்வருத்தக் கூலி தரும்
ஆசிரியர்: த.ஸ்டாலின் குணசேகரன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
138
#mei_varutha_kuli_tharum_book #மெய்வருத்தக்_கூலி_தரும்_நூல் #த_ஸ்டாலின்_குணசேகரன் #stalin_gunasekaran