மூன்றாவது முறையாக பிரதமர் ஆகும் மோடி!?

புதிய கருத்து கணிப்பு முடிவுகள்!

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கி மே மாதம் இரண்டாம் வாரத்தில் நிறைவடையும் என தெரிகிறது.

அனைத்துக் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் பிரதான போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ’இந்தியா டுடே’ மற்றும் ‛ சி வோட்டர்ஸ்’ இணைந்து நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை சுமார் 36 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

அதில், மோடி மூன்றாம் முறையாக பிரதமர் ஆவார் என தெரிய வந்துள்ளது.

முக்கிய மாநிலங்களின் முடிவுகள் :

மேற்கு வங்காளம்

தொகுதிகள் எண்ணிக்கை : 42
திரிணாமுல் காங்கிரஸ் – 22
பாஜக கூட்டணி – 19

கர்நாடகா

தொகுதிகள் எண்ணிக்கை: 28
பாஜக கூட்டணி – 24
இந்தியா கூட்டணி – 4

ஜார்க்கண்ட்

தொகுதிகள் எண்ணிக்கை : 14
பாஜக கூட்டணி – 12
இந்தியா கூட்டணி – 2

பஞ்சாப்

தொகுதிகள் எண்ணிக்கை : 13
பாஜக கூட்டணி – 02
ஆம் ஆத்மி – 05
காங்கிரஸ் – 05
அகாலிதளம் – 01

ஆந்திரா

தொகுதிகள் எண்ணிக்கை : 25
தெலுங்கு தேசம் கட்சி – 17
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் – 08

தெலங்கானா

தொகுதிகள் எண்ணிக்கை : 17
இந்தியா கூட்டணி – 10
பாஜக கூட்டணி – 03
பி.ஆர்.எஸ். – 03
ஏஐஎம்ஐஎம் – 01

டெல்லி

தொகுதிகள் எண்ணிக்கை : 07
பாஜக கூட்டணி – 07

கேரளா

தொகுதிகள் எண்ணிக்கை : 20
இந்தியா கூட்டணி – 20

தமிழ்நாடு

தொகுதிகள் எண்ணிக்கை : 39
இந்தியா கூட்டணி – 39

பாஜக தலைமையிலான கூட்டணி, தமிழ்நாட்டில் ஒரு இடத்திலும் வெற்றி பெறாது என ‘இந்தியா டுடே ‘ மற்றும் ‛சி வோட்டர்ஸ்’ கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

– பி.எம்.எம்

You might also like