அரசியலில் குதித்துள்ள ’இளையத் தளபதி’ விஜய் தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டியுள்ளார். கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார்.
தமிழக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் இதன் பெயரை, ‘தவெக’ என சுருக்கமாக குறிப்பிடும். ஆங்கிலத்தில் அப்படி குறிப்பிடமுடியாது.
திமுகவை ‘DMK’ என்றும், அதிமுகவை ADMK என்றும் குறிப்பிடுகின்றன.
அப்படி பார்த்தால் விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் TVK என்றே குறிப்பிடவேண்டும்.
ஆனால், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நடத்திவரும் கட்சியின் பெயரை ஏற்கனவே TVK என்றே ஆங்கில ஊடகங்கள் அழைத்து வருகின்றன.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியை 2012 ஆம் ஆண்டு ஆரம்பித்த வேல்முருகன், அதன்பின் நடந்த தேர்தலில் காமிரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.
எனவே விஜய் கட்சிக்கு TVK என்ற பெயரை அளிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிட வேல்முருகன் திட்டமிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) இரண்டாக பிளவுபட்டபோது, தாய்க்கட்சி தொடர்ந்து CPI என்றே அழைக்கப்பட்டது.
அதில் இருந்து பிரிந்து வந்த கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) என அழைக்கப்படுகிறது.
எனவே விஜய் கட்சியை அவரின் பெயரை குறிப்பிட்டு TVK (V) என தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கலாம் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
– பி.எம்.எம்.
#விஜய் #தமிழக வெற்றி கழகம் #திமுக #DMK #அதிமுக #ADMK #TVK #தமிழக_வாழ்வுரிமை_கட்சி #வேல்முருகன் #இந்திய_கம்யூனிஸ்ட்_கட்சி #CPI #மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட் #CPIM #tvk #velmurugan #vijay_political_party #tamilaga_vetri_kazhagam #tvk_name_issue