நீர்வழிப் படூஉம் – மாணவர்களுக்கு விலையில்லாப் பிரதிகள்!

சாகித்ய அகடாமி விருது (2023) பெற்ற ‘நீர்வழிப் படூஉம்’ நாவலை கல்லூரி மாணவர்கள் முந்நூறு பேருக்கு விலையில்லா பிரதிகளாக தன்னறம் நூல்வெளி வாயிலாக அனுப்பவுள்ளோம்.

தமிழின் சமகால இலக்கியப்பரப்பில் தன்னுடைய யதார்த்தவாதப் புனைவுப் படைப்புகள் மூலமாக தனித்துயர்ந்து நிற்பவர் எழுத்தாளர் தேவிபாரதி.

மனிதர்களின் புராதன வாழ்வியலை எந்தவித பாவனைகளுமின்றி பட்டவர்த்தனமாக கதையுரைக்கின்றன இவருடைய நூல்கள்.

புதுவெங்கரையாம்பாளையம் எனும் குக்கிராமத்திலிருந்து இலக்கியம் படைத்துவரும் தேவிபாரதியின் இந்நாவல் மன்னிப்பின் ஈரத்தை எடுத்துரைக்கிறது. ஏற்றுக்கொள்ளல் எனும் சாராம்சம் மையமாகத் திகழ்கிறது.

கொங்கு நிலப்பரப்பில் வாழ்ந்த குடிநாவிதர் சமூகம் பற்றிய தனது நினைவுகளைத் தொகுத்து இந்நாவலை எழுதியுள்ளார் தேவிபாரதி.

‘புத்தாயிரத்தில் வெளிவந்த நாவல்களில் படைப்பெழுச்சியும் தனித்துவமும் கலைப்பெறுமதியும் பொருந்திய ஆக்கம்’ என்று இந்நாவலை மதிப்பிடுகிறார் எழுத்தாளர் சுகுமாரன்.

ஆகவே, நம் காலத்தின் முதன்மை எழுத்தாளர்களுள் ஒருவரான தேவிபாரதியை கல்விக் கூடங்களில் மணாவர்களுக்கு அறிமுகமாக்கும் பொருட்டு, இந்நாவலை கல்லூரி மாணவர்கள் 300 பேருக்கு விலையில்லாமல் அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.

விலையில்லா பிரதி பெற மாணவரது கல்லூரி அடையாள அட்டை அவசியமாகிறது. ஆகவே, இந்நாவலைப் பெறவிரும்பும் கல்லூரி மாணவர்கள் தங்களது முழுவிபரங்களை பின்வரும் இணையப்படிவத்தில் பூர்த்திசெய்ய வேண்டுகிறோம்.

சென்னைப் புத்தகத் திருவிழா நிறைவடைந்த பிறகு, மாணவர்களின் முகவரிக்கு இப்பிரதிகளை அனுப்புகிறோம். தமிழின் மிகச்சிறந்த நாவல்களுள் ஒன்று நம் வாசிப்புலகில் இடங்கொள்ளட்டும்.

பிரதி பெறுவதற்கான இணைப்பு: http://bit.ly/48EGlMD
~
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
9843870059
www.thannaram.in

You might also like