மாநில அரசு செலவழித்தாலும், ஒன்றிய அரசு செலவழித்தாலும், இரண்டும் மக்கள் பணம்தான். அதை நானும் மறந்துவிடக் கூடாது. ஒன்றிய அரசிலே இருப்பவர்களும் மறந்துவிடக் கூடாது.
ஒன்றிய அரசிலே இருந்து பணம் கொடுக்கிறோம் என்று சொல்வார்களானால், மாநிலங்களிலேயிருந்து வசூலிக்கப்படுகின்ற வரிதான், ஒன்றிய அரசிடம் குவிந்து, அங்கிருந்து இங்கே வருகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
அதைப்போல, மாநில அரசாகிய நாங்கள் செய்கிறோம் என்று சொல்கிற நேரத்தில், மக்களிடமிருந்து வசூலிக்கப்படுகின்ற வரிதான், எங்களிடமிருந்தும் உங்களுக்கு மீண்டும் பலன்களாகக் கிடைக்கின்றது என்பதை நானும் மறந்துவிடக்கூடாது நீங்களும் மறந்துவிடக்கூடாது.
– கலைஞர் கருணாநிதி
- நன்றி: முரசொலி