படைப்பாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட கவுரமான விருதுகளை, அரசுக்கு எதிரான தங்களின் போராட்டத்தின்போது திருப்பி அளிக்கப்படுவது இன்று நேற்று மட்டுமல்ல. கடந்த நூறாண்டுகளுக்கு முன்பே நடந்துள்ளது. அதன்தொடர்ச்சி தான் தற்போதும் நிகழ்ந்து வருகிறது.
1919-ல் அமிர்தரஸில் நடந்த அட்டூழியங்களுக்குப்பிறகு தனக்கு வழங்கப்பட்ட பட்டத்தை உதறி ஆங்கிலேயப்பிரதிநிதிக்கு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.
”அரசாங்கம் அளித்த தனி விருதுகளை வெறுக்கும் காலம் நெருங்கிவிட்டது.
இப்பேர்ப்பட்ட அவமானம் நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும்போது அதற்குச் சிறிதும் ஒவ்வாத விதத்தில் விருதை நான் மட்டும் அடைந்திருப்பது அவக்கேடு.
பிரத்தியேகமாய் எனக்கென அளிக்கப்பட்ட கௌரவங்களினின்றும் என்னை விடுவித்துக் கொண்டு, மனித வர்க்கத்துக்கே அடுக்காத இழிவுகளைத் தாங்கித் துன்புறும் எனது நாட்டு மக்களுடன் நானும் சேர்ந்து நிற்கப் போகிறேன்”.