கக்கன்: நேர்மையான அரசியலின் அடையாளம்!

நூல் விமர்சனம்:

நேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழ்நாடும் தமிழ் மக்களும் உச்சியில் வைத்துக் கொண்டாடும் தலைவர் கக்கன்.

இப்படியொரு தலைவர் தமிழ்நாட்டில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார், மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கிறார், ஊழலின் நிழல்கூட படியாமல் பல ஆண்டுகளுக்கு அமைச்சராக இருந்திருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். அப்படிப்பட்ட கக்கனை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் முயற்சியே மாமனிதன் கக்கன் என்ற இந்தச் சிறப்புப் புத்தகம்.

விடுதலைப் போராட்ட வீரரான பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 டிசம்பர் 1981), நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்தவர்.

1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு ஆட்சியில் இன்னும் பல பொறுப்புகளை வகித்த கக்கனின் சகோதரர் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர்.

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை, வீடூர் அணைகள் கட்டப்பட்டன.

ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது.

கக்கன் விவசாய அமைச்சராகப் பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் அன்றைய சென்னை மாகாணத்தில் துவக்கப்பட்டன.

இவர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999-ஆம் ஆண்டு வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது. அப்பேர்ப்பட்ட மனிதரைப் பற்றிய இந்த ‘மாமனிதன் கக்கன்’ என்ற நூலை ராமையா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் வாசிக்கவும்.

நூல்: மாமனிதன் கக்கன்
ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்
பதிப்பகம்: ராமையா பதிப்பகம்
விலை: ரூ.120/-

You might also like