கி. ச. திலீபன்
மீன் குழம்பைப் போலவே களி கிளறுவதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். நான் பார்த்த வரையில் சமவெளி மக்களைக் காட்டிலும் இதுபோன்ற மலைப்பகுதியில் வாழும் மக்களுக்குதான் அந்த பக்குவம் நன்கு கை வரப்பெற்றிருக்கிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இப்பகுதி மக்களின் தினசரி உணவாக கேழ்வரகுக் (ராகிக்) களி இருந்தது.
தங்கள் நிலத்தில் உணவுத் தேவைக்காக ராகி விளைவித்தனர். தற்போது ஜவ்வரிசி ஆலைக்காக மரவள்ளிக் கிழங்கு விளைவித்து பொருளாதார அளவில் மேம்பட்டு விட்டனர்.
ஆகவே ராகி உற்பத்தி குறைந்து விட்டதால் அன்றாட உணவுப் பழக்கத்தில் இருந்து களியும் காணாமல் போய்விட்டது.
ஈரோடு மாவட்ட நிருபராக இருந்த போது செய்தி சேகரிக்க பழங்குடி மக்களின் கிராமங்களுக்குச் செல்லும் போதெல்லாம் ராகிக் களி இருந்தால் கொடுங்கள் என கேட்டு வாங்கிச் சாப்பிடுவேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் கடம்பூரில் உள்ள ஓர் உணவகத்தில் ராகி களி வாங்கிச் சாப்பிட்டேன்.
சரியான பக்குவத்தில் கிளறியிருந்தனர். கருவாட்டுக் குழம்பும் அற்புதம். 60 ரூபாய்க்கு நிறைவான உணவு.
நன்றி: முகநூல் பதிவு