ஆவணப் பட இயக்குநர் சாரோன் செந்தில்குமார், சமீபத்தில் மொரிசியசு நாட்டுக்குச் சென்றுவந்த பயண அனுபவக் குறிப்பு.
இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக கிராமங்களில் மாட்டுத் தொழுவமோ ஆட்டுப் பட்டியோ இல்லாத வீடுகள் குறைவாகவே இருக்கும்.
அவை இல்லாவிட்டாலும் தவறாமல் எல்லா வீட்டு வாசல்களிலும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் அதிகமான முருங்கை மரங்கள் கட்டாயம் இருக்கும்.
(ஒரு முருங்கை மரமும் ஒரு எருமை மாடும் இருந்தால் எவ்வளவு பெரிய வறுமையையும் சமாளித்துவிடலாம் – பழமொழி) இப்படித்தான் மொரிசியசில் ஒவ்வொரு வீட்டின் வளாகத்திலும் லிச்சிப் பழ மரங்கள் பசுமையாக நிற்கின்றன. இப்போது பருவகாலம் என்பதால் மரங்களில் பழங்கள் அதிகமாக பூத்து குலுங்குவதோடு லிச்சிப் பழங்கள் பழுத்து மரங்கள் வசீகரிக்கின்றன.
லிச்சிப் பழங்களுக்காக காத்திருக்கும் உயிர்களில் மனிதர்களைப் போலவே தான்
வௌவால்களும் எலிகளும்.
ஆனால் லிச்சி மரங்கள் பூத்து பிஞ்சுகள் வந்ததுமே பெரிய பெரிய வலைகளைப் போட்டு மரங்களை மூடி சிறைப்பிடித்து விடுகிறார்கள் மக்கள்.
இந்த வகைகளுக்கு வௌவால்கள் ஓரளவு கட்டுப்படுகின்றன. ஆனால் மரம் ஏறும் எலிகள் மொட்டை மாடியில் குடியிருக்கும் எலிகளை ஒன்றும் செய்ய முடிவதில்லையாம்.
லிச்சிப் பழங்கள் அதிக மருத்துவகுணங்கள் கொண்டது என்பதால் நாமும் அந்த மரங்களை வளர்ப்பதில் அதிக ஆர்வத்தை வளர்த்துக் கொள்வோம்.