அருமை நிழல்:
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக அயல்நாடுகளில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படம் ‘சிவந்த மண்’. படம் வெளியான நாள் 09-11-1969.
ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆல்ப்ஸ் மலை போன்ற பல இடங்களில் படமாக்கப்பட்டன.
இந்தப் படத்தில் இடம்பெற்ற “பார்வை யுவராணி…” பாடல் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தில் படமாக்கப்பட்டது. சிவந்த மண் படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான அத்தனைப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
வெற்றிக் காவியமான ‘சிவந்த மண்’ படத்தின் 100-வது நாள் விழாவில் பங்கேற்று நடிகர் திலகத்திற்கு பரிசு வழங்குகிறார் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.
நன்றி: சிவாஜி ரசிகர்கள் முகநூல் குழு