மக்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி!

தேசிய சட்டச் சேவைகள் தினம் நவம்பர் 9-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சட்டச் சேவைகள் அதிகார சட்டம் 1987ஐ ஏற்றுக்கொண்ட தினம் தான் சட்டச் சேவைகள் தினம். இந்த சட்டம் அலுவல் ரீதியாக 1995ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது.

அப்போது முதல், சட்டச் சேவைகள் தினம் இந்திய மாநிலங்கள் முழுவதிலும், பொதுமக்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது.

தேசிய சட்டச் சேவைகள் தினத்தை தொடர்ந்து, தேசிய அளவில் தேசிய சட்ட சேவைகள் முகமை அமைக்கப்பட்டது. 

பொதுமக்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய சட்ட சேவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எந்த பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்றாலும், எந்த அடையாளத்தில் இருந்து வந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கு இலவச சட்ட உதவிகள் உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் இந்த நாள் நவம்பர் 9ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

விளிம்பு நிலை மக்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு சட்ட அறிவு குறித்தும், பொதுமக்களுக்கு அவர்களின் உரிமைகள் மற்றும் இலவச சட்ட ஆலோசனைகள் குறித்து கற்பிக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தை இந்திய உச்சநீதிமன்றம் நிறுவியது.

1995ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி சட்டச் சேவைகள் அதிகார சட்டத்தை இந்திய உச்சநீதிமன்றம் இயற்றியது. மக்களுக்கு இலவச சட்டச் சேவையை வழங்குவது அதன் நோக்கம்.

இந்த சட்டத்தின்படி சமூகத்தில் பலவீனமான நிலையில் உள்ள மக்களால் இலவச சட்ட உதவியை பெற முடியும். தேசிய, மாநில, மாவட்ட அளவிலான உதவிகளைப் பெற முடியும்.

இந்த நாளில் லோக் அதாலத்களை நடத்துவது, சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, தேவை உள்ள மக்களை அணுகுவதற்கு சட்ட உதவி முகாம்கள் நடத்துவது என பல்வேறு வேலைகள் மேற்கொள்ளப்படுகிறது.

You might also like