90’ஸ் இளைஞர்களின் கனவுக்கன்னி தபு!

இந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர், தபு. தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கிட்டத்தட்ட கதை தேர்வு, தேர்ந்த நடிப்பு ஆகியவற்றின் மூலம் மட்டுமே இந்திய சினிமாவில் 32 ஆண்டுகளாகப் பயணித்து வருகிறார்.

இளமைக் காலம்:

தபுவின் இயற்பெயர், தபுசம் பாத்திமா ஹாஸ்மி. பிறந்தது நவம்பர் 4, 1971. பெற்றோர் ஜமால் அலி ஹாஸ்மி – ரிஸ்வானா.

80-களிலிருந்து திரையுலகில் நடித்து வரும்

நடிகை தபு தமிழில் ‘காதல் தேசம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்தி மொழியில்தான் தபு அதிகத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படம் தபுவுக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

தபுவின் தமிழ்ப் படங்கள்:

தமிழில், காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே, உருமி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இருப்பினும், இன்று வரை குறிப்பிடத்தக்க நடிகையாக, தமிழ் மக்களால் நன்கு அறிந்தவராக இருந்து வருகிறார். இதற்கு அவர் நடித்த படங்களே காரணம் என சொல்லலாம்.

காதல் தேசம்:

இரு ஆண்கள் சேர்ந்து, ஒரு பெண்ணை காதலிக்கும் நாயகியாக தபு நடித்த படம் தான், காதல் தேசம். இப்படத்தில் வந்த திவ்யா இன்று வரை நினைவு கூரப்படுகிறார்.

இருவர்:

தமிழ்ச்செல்வன் என்னும் அரசியல் ஆளுமையாக நடித்த பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி செந்தாமரை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்தவர். சில நிமிடக் காட்சிகளில் தோன்றினாலும் முத்திரை பதித்தவர்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்:

ராஜீவ் மேனன் இயக்கிய இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயின் அக்கா செளமியாவாக நடித்திருப்பார். இன்று வரை, நடிகர் அஜித் குமாரின் மோஸ்ட் ரொமாண்டிக் ஹீரோயின்களின் பட்டியலில் முக்கிய இடம்பிடித்தவர்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்னும் பாடல், இன்றும் பலரது ப்ளே லிஸ்டில் உள்ளது.

தபு, தமிழ் மட்டுமல்லாது பிறமொழிகளில் நடித்து இதுவரை 2 தேசிய விருதினையும், பத்மஸ்ரீ விருதினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

– நன்றி: இந்துஸ்தான் தமிழ்

You might also like