இன்பமும் துன்பமும் மனதைப் பொருத்தே அமையும்!

– சிந்தனையாளர் பெர்னாட்ஷாவின் மேற்கோள்கள்:

  • சந்தேகத்திற்கு இடமின்றி விவசாயம் மட்டுமே பயனுள்ள தொழிலாகும்.

  • அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர், அது வலிகளைத் தந்த பிறகுதான் பாடத்தைக் கற்பிக்கிறது.

  • மனிதர்களுள் இரு வகையினர் உண்டு. திறமையானவர்கள் ஒருவகை, மற்றவர்கள் திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.

  • மனிதனால் மிக உயர்ந்த சிகரங்களில் கூட ஏற முடியும், ஆனால், அவனால் அங்கேயே நீண்ட காலம் தங்க முடியாது.

  • எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர்.

  • செய்ய வேண்டியதைச் செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராமல் இருக்கலாம். ஆனால் அது உங்களைச் சிறந்தவராக மாற்றும்.

  • மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது; எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.

  • நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.

  • செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். அது மகிழ்ச்சியானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது மகத்துவமானது.

  • உங்கள் சோகமான தருணங்களை மணலில் எழுதுங்கள், உங்கள் நல்ல தருணங்களை கல்லில் எழுதுங்கள்.

  •  வாழ்க்கை என்பது உங்களை நீங்களே கண்டுபிடிப்பதைப் பற்றியது அல்ல, வாழ்க்கை என்பது உங்களை நீங்களே உருவாக்குவதைப் பற்றியது.

  • உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது.

  • சரியான வாய்ப்புக்காக காத்திருக்காதீர்கள், அதை உருவாக்குங்கள்.

  • இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல, மனதைச் சார்ந்தவை.

  • பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது.

  • பெண்ணை ஒரு பொருள்போல நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.

  • நம்பிக்கையை இழக்காதீர்கள், நீங்கள் ஒரு வெற்றிக் கதையாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு நீங்களே உறுதியளியுங்கள், பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் உங்களுக்கு உதவுவதற்காக ஒன்றுசேரும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

  • செல்வத்தை சம்பாதிக்காமல் அனுபவிக்க உரிமை கிடையாது. அதுபோலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகரமுடியது.

    தொகுப்பு: யாழினி

You might also like