எம்.ஜி.ஆர் தனிமனிதர் அல்ல!

– கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்து நடத்திய ‘தென்றல்’ (06.09.1958) இதழில் ‘புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை. இதை எழுதியவர் இரா.இளஞ்சேரன்.

நாட்டிலே எத்தனையோ நடிகர்கள், நடிப்புக் கலையின் பல்வேறு இயல்புகளில் புகழ்மிக்கோர் இருந்தாலும், தனித்த செல்வாக்குப் பிறருக்கு இல்லாத ‘ஜொலிப்பினை’ எம்.ஜி.ஆர் பெற்று இருக்கிறார்.

அது வெறும் சினிமா ஜொலிப்பு அல்ல. கருத்தின் ஜொலிப்பு. பிறந்த மண்ணிற்குப் பணிவோர் மட்டுமே பெறும் ஜொலிப்பு.

எம்.ஜி.ஆர். – தனிமனிதர் அல்ல. ஒரு சமுதாயத்தின் மிகப்பெரிய ஆறுதல். வீழ்ச்சியுற்றோர் படைத்திட்டப் பாசறையின் கலைச்செல்வம் கலைவாணருக்குப் பின் இயக்கம் கண்டெடுத்த பவளம்.

அந்தப் புகழின் செல்வர், கலை உலகத்தின் தலைமகன். இலட்சியத்தோடு இலட்சியமாக இணைந்துவிட்ட கொள்கைவாதி.

அண்ணாவின் அன்புக்குப் பாத்திரமானவர், இயக்கத்தின் மூத்த பிள்ளைகளிலே ஒருவர். வருங்காலச் சரித்திரம் எம்.ஜி.ஆர். எனும் தலைப்பின் கீழ் இந்தச் சேதிகளைத்தான் சுமந்து நிற்கப் போகிறது” என்று இளஞ்சேரன் எழுதி இருந்தார்.
***
க.திருநாவுக்கரசு தொகுத்துள்ள ‘திமுக வரலாறு’ பாகம்-3 நூலிலிருந்து…

You might also like