முதல் படத்திலேயே நிராகரிக்கப்பட்ட நிவின் பாலி!

மலையாளத் திரையுலகில் இளைஞர்களால் ஈர்க்கப்படும் இளம் நாயகனான நிவின் பாலி, கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகேயுள்ள ஆலுவாவில் 1984 இல் பிறந்தார்.

சிறிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நிவின் பாலியின் தந்தையும், தாயும் ஸ்விட்சர்லாந்தில் வேலை பார்த்த காரணத்தால், விடுமுறை நாட்களில் மட்டும் தன் பெற்றோருடன் சேர்ந்து நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததார்.

சிறுவயதில் இருந்தே நிவின்பாலிக்கு சினிமா மீது ஒரு தீராத ஆர்வம் இருந்து வந்தது.

மலையாள நட்சத்திர நாயகர்களான மம்மூட்டியையும் மோகன்லாலயைும் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனையும் இவருக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்.

படிப்பிலும் குறைவில்லாமல் படித்த நிவின் பாலி, எலக்ட்ரிக்கல் அன்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றார்.

சினிமா ஆசை அவ்வப்போது எட்டிப் பார்தாலும் அதை மறைத்துவிட்டு பெங்களூரில் உள்ள இன்போசிஸ் கம்பெனியில் வேலை பார்த்தார்.

தன் தந்தையின் மரணத்துக்கு பிறகு வேலையைவிட்டு சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார்.

இந்த காலகட்டத்தில் சிறிய மியூசிக் ஆல்பம், குறும்படம் என தன்னை சினிமா தொடர்பான விஷயங்களில் இணைத்து கொண்டே வந்தார்.

2010ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் தயாரிப்பில் மாம்பழம், சைக்கிள், மாக்கண்டே அச்சன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வினித் சீனிவாசன் தனது அடுத்த படமான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்புக்கு நடிகர்கள் தேர்ந்தெடுக்க ஆடிஷன் வைத்தார்.

இந்தத் திரைப்படத்தில் தான் முதன்முதலாக நிவின் பாலி நடித்திருந்தார். ஆனால் இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆடிஷனுக்கு அப்ளை பண்ணி இருந்தார். ஆனால் தேர்வாக முடியவில்லை.

உடனே அவரும் இந்த முயற்சியை கைவிட்டார். பின்பு அந்தத் திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய ஆள் பின்வாங்கிக் கொண்டதால், அடுத்ததாக நிவின் பாலியை  நடிக்க அணுகினார்கள்.

அப்படிப் படிப்படியாக நடித்து மொத்த பார்வையாளர்களையும் கவர்ந்து இழுத்தார் நிவின் பாலி.

அந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், புகழ் வெளிச்சத்துக்கு வந்தார் நிவின்பாலி.

அதன்பிறகு நடித்த ட்ராபிக், தி மெட்ரோ, செவன்ஸ் என நடிப்பில் நல்ல பெயரை பெற்றுத் தரும் படங்களாக அமைந்தன.

2012ம் ஆண்டு நடிகை நஸ்ரியாநசீம் உடன் இவர் நடித்த ‘உவ்க்’ இவருக்கு நல்ல பிரபலத்தைக் கொடுத்தது.

2013ல் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ‘நேரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நிவின் பாலி.

இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நிவின் பாலிக்கு ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. பல வெரைட்டியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பது தான் நிவின் பாலியின் ஸ்பஷெல்.

மல்ட்டி ஹீரோ கான்ச்செப்டில் நடித்த ‘பெங்களுர் டேஸ்’ இவருக்கு பெரும் படமாக அமைந்தது மட்டுமில்லாமல் கடைநிலை ரசிகன் வரை இவரை கொண்டு போய் சேர்த்தது.

இவரது நடிப்பில் வெளிவந்த ‘1983’ என்ற படத்தின் மூலம் கேரள மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் நிவின் பாலி.

இதற்கெல்லாம் கிரீடம் வைக்கும் விதமாக 2015ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இவர் நடித்த ‘பிரேமம்’ இந்திய அளவில் இவருக்கு பெயரினைத் தேடித் தந்தது.

அதன்பிறகு இப்படம் தெலுங்கிலும் டப் செய்யபட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் 100 நாட்களை கடந்து ஓடிய தமிழ் சினிமா என பல்வேறு சிறப்புகளை இப்படம் இவருக்கு பெற்று தந்தது.

இந்த படத்தின் மூலம் மலையாளப் பட உலகில் ஸ்டார் அந்தஸ்து கொண்ட நடிகர்களின் பட்டியலில் இணைந்தார் நிவின்பாலி.

அதன்பிறகு நிவின்பாலியின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. இதைத் தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோ பிஜ்ஜூ, சகாவு போன்ற படங்கள் வெளியாகின.

தமிழ் சினிமா மீதும் தனது கவனத்தை குவித்து அதற்கேற்ப கதைகளங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடன கல்லூாியில் படித்த ரின்னா ஜாய் என்ற பெண்ணை 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிவின் பாலிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

நிவின் பாலி நல்ல நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த தயாரிப்பாளராகவும் இருப்பது பலருக்குத் தெரியாது.

2016 ல் வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படமான ஆக்ஷன் ஹீரோ பிஜு இவர் தயாரித்தது தான்.

இது அவரது சிறந்த தயாரிப்புத் திறனைத் தெளிவாகக் காட்டியது. அதோடு உயர்தரத் திட்டங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட ஒரு குறைபாடற்ற தயாரிப்பாளராகவும் அவரை நிரூபித்தது.

பல படங்களில் அவரது அற்புதமான நடிப்பிற்காக பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பல பாராட்டுகளையும் அன்பையும் பெற்றுள்ளார்.

வளர்ந்து இளம் நடிகரான நிவின் பாலிக்கு அவரது திறமையை வெளிப்படுத்தும் விதமான சிறந்த படங்கள் அமைய வாழ்த்துகள்.

You might also like