அருமை நிழல்:
36 பிராந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
இவரது கலையுலக வாழ்க்கை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
1974-ம் ஆண்டு அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த லதா மங்கேஷ்கருக்கு அவரின் 90வது வயதில் இந்திய மகள் விருதை கொடுத்து மத்திய அரசு கவுரவித்தது.
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் ஒருவர் லதா மங்கேஷ்கர்; மற்றொருவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
இரு பெரும் பாடகிகளும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் இது.
நன்றி: முகநூல் பதிவு