40 வயதில் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது ஏன்?

40 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படுவது ஏன்? இதனைக் கட்டுப்படுத்த உட்கொள்ளவேண்டிய உணவுகள் என்னென்ன என்பது பற்றிப் பார்ப்போம்.

மெனோபஸ் காலத்துக்கு பிறகு பெண்களின் உடலில் இயல்பாகவே வைட்டமின் டி குறைபாடு அதிகரிக்கும். அதேபோல உடலும் வைட்டமின் டி – யைக் குறைவாகவே உற்பத்தி செய்யும். இது எலும்புத் தேய்மானத்துக்கு காரணமாக இருக்கிறது.

குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவு மெனோபஸ் காலகட்டத்திற்கு பிறகு குறைய ஆரம்பிக்கிறது.

இதனால் உணவில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்டவற்றை குடல் முழுமையாக உறிஞ்சிக் கொள்ள முடியாததால் எலும்புத் தேய்மானப் பிரச்சினை அதிகரிக்கிறது.

இதற்குக் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.

குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து கொள்ள ப்ரோ – பயோடிக் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி உணவில் மோர், தயிர் உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்வது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியம்.

குறிப்பாக, ஆரஞ்சு, கொய்யா, பேரிக்காய், மாதுளை உள்ளிட்ட பழங்களில் இருந்து அதிகமாக நமக்கு கால்சியம் சத்து கிடைக்கும்.

40 லிருத்து 50 வயதைக் கடந்த பெண்கள் இந்தப் பழங்களில் ஏதாவது ஒரு பழத்தை தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம் பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிற கால்சியம் சத்து குறைபாடு, ரத்தத்தில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாடு ஆகியவற்றை சரிசெய்ய முடியும்.

தினமும் குறைந்தது ஒரு ஸ்பூன் கீரையாவது நம்முடைய உணவில் இருக்க வேண்டியது அவசியம்.

கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி ஒரு கப் நிறைய பொரியலாக எடுத்துக் கொள்ளும்போது அதிகப்படியான கால்சியத்தை உடலால் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மேலும், இலந்தைப் பழத்தை உட்கொள்வது நல்ல பலன்களைத் தரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

– சங்கீதா

You might also like