சீர்திருத்தக் கவிஞர் உடுமலை நாராயண கவி!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளாவாடி கிராமத்தில் 1899-ம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் உடுமலை நாராயண கவி. இவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர்.

‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியவர். ஏறத்தாழ 10,000 பாடல்கள் எழுதியுள்ளார். இயல்பாகவே இனிமையாக பழகும் சுபாவம் கொண்டவர்.

திரையுலகில் தனக்கென ஒரு தனி மதிப்பையும் புகழையும் உண்டாக்கிக் கொண்டவர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள்.

கலைவாணர் வாழ்ந்த காலம் வரை அவர் வீட்டிலேயே வாழ்ந்த கவிராயர்,

என்.எஸ்.கே மறைவுக்குப்பின் “நான் யாரிடமும் பாட்டெழுத தேடிச் சென்று வாய்ப்பு கேட்க மாட்டேன்” என்று தன் சொந்த கிராமத்துக்கே சென்றுவிட்ட சுயமரியாதை மனம் கொண்டவர்.

இவர்தம் 82வது வயதில் 1981-ம் ஆண்டில் காலமானார். 2008ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல்துறை இவருக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட்டது. கவிராயர் அவர்களுக்கு உடுமலைப்பேட்டையில் மணிமண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது.

நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி.

You might also like