குழந்தைகளின் அன்பு அலாதியானது!

ரசனைக்குச் சில வரிகள்:

“உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்வதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், நடிப்பும் கலந்திருக்கின்றன.

குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தைகளை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி, அதற்குத் தக்கவாறு நடந்து கொள்கிறார்கள்.

ஆனால் அந்தச் சூதுவாது தெரியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை.

அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனதில் தைத்தது”

– கு.அழகிரிசாமி எழுதிய ‘அன்பளிப்பு’ சிறுகதையில் இருந்து ஒரு பகுதி…

You might also like