இயக்குநர் வசந்தபாலன் வழங்கும் ‘டீமன்’ படத்திற்கு அதிக திரைகள்!

சஸ்பென்ஸ் – த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் ‘டீமன்’ படத்தினை தேசிய விருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்துள்ளார்.

‘அங்காடித்தெரு உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ’டீமன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்.

இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

படத்திற்கு அதிக திரைகள் கிடைத்துள்ளது பற்றிப் பேசிய இயக்குநர் ரமேஷ் பழனிவேல், “ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கும் போதும் ‘டீமன்’ படத்திற்கான திரையரங்க எண்ணிக்கையும் அதிகமாகக் கிடைத்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

கிட்டத்தட்ட 150 திரைகள் ’டீமன்’ படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. ரசிகர்களும் ஊடகங்களும் படத்தைப் பார்த்து விட்டு ஆதரவு தர வேண்டும்” என்றார்.

மோகன்லாலின் தேசியவிருது பெற்ற திரைப்படமான ‘மரைக்காயர்’ படத்தில் தனது அற்புதமான இசைக்காக பாராட்டுகளைப் பெற்ற ரோனி ரஃபேல், இந்தப் படத்திற்கும் இசையமைக்க, கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் கதை நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது பீட்சா, ராட்சசன், பிசாசு மற்றும் பல படங்கள் இந்த ஜானரில் வெளியாகி வெற்றிப் பெற்றதற்கு உதாரணங்களாக இருக்கிறது.

’டீமன்’ திரைப்படம் இவை அனைத்தையும் உள்ளடக்கி, உணர்ச்சிகரமான கதையுடன் வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி வழங்கிய ‘பிகினிங்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ்குமாரின் நடிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயில்’ படத்தில் சிறந்த நடிப்பையும், ‘தேன்’ படத்திற்காக பல விருதுகளையும் பெற்ற அபர்நதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

You might also like