இனிதே துவங்கப்பட்ட சினிமாவுக்கான தனி இணைய இதழ்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளாக தனித்துவமான இணைய இதழாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது தாய் இணைய இதழ்.

பல லட்சம் வாசகர்களைச் சென்று அடைந்திருக்கிற தாய் இணைய தளத்தைத் தொடர்ந்து, அதே குழுமத்திலிருந்து சினிமாவுக்கென்று தனி வடிவமைப்புடன் இன்று (21.09.2023) வெளி வந்துள்ளது – சினி ராக்கெட் (https://cinirocket.com/) இணைய தளம்.

இதன் துவக்க விழா, டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இனிதே துவங்கியது. கல்லூரித் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் முன்னிலையில், மூத்த பத்திரிகையாளர்கள் ‘கல்கி’ ப்ரியன், மணா, கதை சொல்லி ஆசிரியர் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற மேடையில் மூத்த பத்திரிகையாளர் பாகி என்கிற பா.கிருஷ்ணன் சினி ராக்கெட் இணைய இதழைத் துவக்கி வைத்தார்.

எத்தனையோ முக்கியமான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு பல்வேறு பெருமை படைத்த சத்யா ஸ்டூடியோ வளாகத்திலிருந்து சினிமாவை மையப்படுத்திய இணைய இதழைத் துவக்கி இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

உங்களது மேலான ஆதரவை இந்த இணைய இதழுக்கு வழங்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

You might also like