காமெடி வில்லனாகும் செய்தி வாசிப்பாளர் ஸ்ரீதரின் மகன்!

தமிழ்த் தொலைக்காட்சிகளில் 80-களில் இருந்து இன்று வரை செய்தி வாசித்து வருபவர் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் ஆரம்ப நாட்களில் பொதிகை, சன் டிவி, ராஜ் டிவி, ஜெயா டிவியில் செய்தி வாசித்து வந்தவர் தற்போது நியூஸ் 7 சேனல் செய்தி வாசிப்பவராக இருந்து வருகிறார்.

மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இவர் தமிழ் உச்சரிப்புக்கு அபிமானிகள். இவரது மகன் ஸ்ரீவத்சன். விஸ்யூவல் கம்யூனிகேசன் முடித்துள்ள ஸ்ரீவத்சன் இதற்கு முன்பு வலியவன், மஞ்சப்பை போன்ற படங்களில் சிறு வேடங்களில் தலை காட்டியுள்ளார்.

தற்போது விஜய் ஆண்டனி நடித்து விரைவில் வெளி வரவுள்ள ரத்தம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்கும் வேலையில் வெண்ணிற ஆடை மூர்த்தி பாணியில் நகைச்சுவை செய்ய இருப்பதாக ஸ்ரீவத்சன் சொல்கிறார்.

ஸ்ரீவத்சன் வருகைக்கு வாழ்த்துகள்.

You might also like