ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட விஜய் ஆண்டனி படம்!

தனது தனித்துவமான கதைத் தேர்வினால், பாக்ஸ் ஆஃபிசில் வசூல் நாயகனாக மாறியுள்ள நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தத் திரைப்படமாக ‘ரத்தம்’ வெளியாக உள்ளது. சி.எஸ். அமுதன் படத்தை இயக்கியுள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதியில் இருந்து வெளியீட்டை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு அறிவித்துள்ளது.

‘தமிழ் படம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வித்தியாசமான பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக ‘ரத்தம்’ உருவாகியுள்ளது.

விஜய் ஆண்டனியுடன் இணைந்து மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘ரத்தம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி மூன்று மில்லியன் பார்வைகளைத் தாண்டி டிரெண்டிங்கில் உள்ளது.

You might also like