நமது போட்டியாளரைவிட ஒரு படி முன்னே இருக்க வேண்டும்!

படித்தில் ரசித்தது:

ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் மைக் டைசன் உடனான உரையாடல் இவை:

தொகுப்பாளர் : நீங்கள் பயிற்சி செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவீர்களாமே – அது உண்மையா?

மைக் டைசன் : இல்லை. 4 மணிக்கு நான் ஓடிக்கொண்டிருப்பேன். அதனால் அதற்கு முன்னரே எழுந்து விடுவேன்.

தொகுப்பாளர் : நீங்கள் ஏற்கனவே ஒரு உலக சாம்பியன், இதையெல்லாம் ஏன் செய்கிறீர்கள்?

மைக் டைசன் : நான் ஒரு உலக சாம்பியன். அதுதான் இதற்கெல்லாம் காரணம். என்னுடைய எதிரிகள் வெற்றி மமதையில் இரவு பார்ட்டி செய்துவிட்டு வெகு நேரம் தூங்கி, சரியான உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை கூடுகிறார்கள்.

அவர்களில் ஒரே ஒருவர் அதிகாலை 4 மணிக்கு ஓடிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டால் நான் 2 மணிக்கே எழுந்து ஓட ஆரம்பித்து விடுவேன்.

அவர்களில் ஒரே ஒருவர் அதிகாலை 2 மணிக்கு ஓடிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டால், நான் தூங்குவதையே விட்டுவிட்டு இரவு முழுவதும் ஓடி உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பேன்.

அதனால் தான் நான் உச்சியில் இருக்கிறேன். இப்படி பயிற்சி செய்வது என்னுடைய பொறுப்பு, அவர்களுடையதல்ல.

-முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

நம் போட்டியாளர் செய்யாத ஒன்றை, அவரை விட ஒரு படி மேலே போய் நாம் செய்தால் மட்டுமே நாம் வெற்றியாளராக நிலைக்க முடியும்.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like