இயக்குநரான இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா!

மலையாளத்தில் 8 படங்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா 4 மொழிகளில் உருவாகும் ‘சிகாடா’ படத்திற்கு இசையமைப்பதுடன் இப்படத்தின் வாயிலாக இயக்குநராகவும் அடியெடுத்துவைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் ‘பான் இந்திய’ படமாக ‘சிகாடா’ (Cicada) தயாராகி வருகிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட பதிப்புகளுக்காக புத்தம் புதிய 16 ட்யூன்களுடன் இசையமைத்துள்ள பாடல்கள் படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம். நான்கு வெவ்வேறு மொழிகளுக்கு வெவ்வேறு விதமான ட்யூன்களுடன் ஒரு படம் வெளியாவது என்பது இதுதான் முதல்முறை.

இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா டைரக்சனில் நுழைந்துள்ள முதல் படமாக ‘சிகாடா’ அமைந்துள்ளது.

தமிழில் இயக்குநர் விக்ரமன் படம் மூலமாக அறிமுகமாகி பிரபலமான மற்றும் பல தமிழ்ப் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ள ரஜித் CR முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காயத்ரி மயூரா கதாநாயகியாக நடிக்கிறார்.

பெங்களூரு, சோலையூர், அட்டப்பாடி (தமிழக எல்லை), வாகமன் மற்றும் கொச்சி உள்ளிட்ட அழகான இடங்களில் ‘சிகாடா’வின் படப்பிடிப்பு நடை பெற்றிருக்கிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடா என நான்கு மொழிகளில் இப்படம் நேரடியாகவே படமாக்கப்பட்டுள்ளது.

“சில பிரத்யேகமான இடங்களில் அழகான காட்சிகளை படமாக்க மிகப்பெரிய முயற்சியை ஒளிப்பதிவாளர் நவீன்ராஜ் வழங்கியிருக்கிறார்.

இவற்றில் சில இடங்களை அடைவதற்கு படக்குழுவினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கடும் சிரமங்களுடன் நடந்தே சென்றுள்ளனர்.

நாயகன் ரஜித் சில கடினமான நிலப்பரப்புகளில் காட்டெருமை, காட்டு நாய்கள் ஆகியவற்றுடன் டூப் நபர்களை பயன்படுத்தாமல் நடித்திருக்கிறார்” என்கிறார் இயக்குநர் ஸ்ரீஜித் எடவானா.

You might also like