சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையத் தலைவர் ராஜிவ் குமார் இன்று மத்திய பிரதேசம் சென்றுள்ளார்.

அங்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விளக்கமளித்த அவர், “அரசியலமைப்பு வழங்கியுள்ள விதிகளின்படி நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதுதான் எங்களது பணி. நாடாளுமன்ற பதவிக்காலம் ஐந்தாண்டு. நாங்கள் ஆறு மாதத்திற்கு முன் தேர்தலை அறிவிக்க முடியும். அதேபோன்றுதான் சட்டமன்ற தேர்தலுக்கும். சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

You might also like