சின்னக்குயில் சித்ரா-60: நெகிழ வைத்த கொண்டாட்டம்!

ஓணம் சிறப்பு நிகழ்வாக ஏசியா நெட் தொலைக்காட்சியில் – பல மொழிப் பாடகியான சித்ராவுக்கான 60 ஆண்டுக்கான கொண்டாட்டம்.

சிங்கப்பூரில் பார்வையாளர்கள் நிரம்பியிருந்த நவீனப் பிரமாண்டமான ஹாலில் நடந்த விழாவில் வழக்கமான சாந்தப்படுத்தும் குரலால் பலரையும் வசியப்படுத்திவிட்டார்.

பாசிலின் ”பூவே பூச்சூட வா” படத்தில் இளையராஜாவின் இசையில் சித்ரா பாடிய பாடல்களைக் கேட்டு லயித்துப் போய், ரயிலில் சென்ற சித்ராவிடம் அப்போது ஆட்டோகிராப் வாங்கப் படாதபாடு பட்டு, அது நிறைவேறாமல் போனதையும் சொல்லிப் பரவசமாகிக் கொண்டிருந்தார் மலையாள ஸ்டாரான சுரேஷ் கோபி.

பாடகர் மதுபாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் சித்ராவுடன் பாடிய தருணங்களை மேடையில் நினைவுகூர நெகிழ்ச்சியான மன நிறைவுடன் தன்னுடைய ‘பிராண்ட்’ புன் சிரிப்புடன் நன்று சொன்னார் சித்ரா.

சிங்கப்பூரில் இருந்த மலையாளப் பெண்களும், சிறுமிகளும் ஓணத்திற்கான உடைகளோடு சித்ராவின் பாடலைக் கோரஸாகச் சேர்ந்து பாட, நடுவில் உயிர்ப்புள்ளியாக சித்ரா அமைதி தவழ்ந்த முகத்தோடு நின்று கொண்டிருந்த காட்சி அவர் பாடிய பல பாடல்களை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.

”சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேட்குதா.. குக்குக்கூ” என்று கூவிய சித்ராவின் குரலுக்கு இன்னும் வயது ஏறவில்லை.

– யூகி

You might also like