‘பராசக்தி’ படம் பற்றிய கலைவாணரின் பாடல்!

1952 அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி கலைஞரின் வசனத்தில் பராசக்தி வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றபோது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எழுதிய பாடல் இது;

*****

“படத்தைப் பார்க்கணும்.. பராசக்தி

படத்தைப் பார்க்கணும்.

கருணாநிதி வசனத்தோடு

கணேசனின் புகழுக்குரிய (பட)

பாமர மக்கள் மனதிலே பல

புதிய கருத்தைப் பதிய வைக்கும் (பட)

கடவுள் தலையில் பாரத்தைப் போட்டு

கதைகள் சொல்லும் காங்கிரஸ் கார்ரும் (பட)

சினிமா வேண்டாம் என்று சொல்லி

சீறிப் பேசும் சி.ஆரும்  (பட)

என்னென்ன வேணுமோ

அதெல்லாம் நல்லா அமைஞ்சிருக்கு.

ஒவ்வொண்ணும், கருத்தாய்

மூளையைக் கிளறி விட்டிடிச்சு

பஞ்சம் பட்டினி நீங்கி வாழ

பஜகோவிந்தம் போடுறதை விட்டுட்டு (பட)

இந்தப் பாடலில் கலைவாணர் சி.ஆர் என்று குறிப்பிட்டிருப்பது சி.ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜியை.

  • 1952 ஆம் ஆண்டு ‘போர்வாள்’ பத்திரிகை சார்பில் வெளியிடப்பட்ட ‘பராசக்தி’ சிறப்பு மலரில் இருந்து…

*

You might also like