மறுபிறவி எடுத்துவந்து காட்சி தந்த மக்கள் திலகம்!

அருமை நிழல்:

1967ம் ஆண்டு, தமிழக அரசியலிலும் தமிழ்த் திரையுலகிலும் மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது. ஜனவரி 12ம் தேதி எம்.ஜி.ஆர் சுடப்பட்டார். 13ம் தேதி ‘தாய்க்கு தலைமகன்’ வெளியானது. ஆனாலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்கவில்லை.

சுடப்பட்டு எட்டு மாதங்கள் கழித்து, ‘காவல்காரன்’ வெளியானது. துக்கமும் அழுகையுமாக வந்து படம் பார்த்தார்கள். எதிர்பார்த்த வெற்றியை விட, இரண்டு மூன்று மடங்கு வெற்றியைத் தந்தார்கள்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ‘காவல்காரன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம் இது.

நீண்ட ஆயுலோடோடு எம்.ஜி.ஆர் இருக்க வேண்டும் என போற்றும் வகையில் “நினைத்தேன் வந்தாய் நூறு வயது” என்ற பாடல் ஒலிக்க அற்புதமான அந்தப் பாடலுக்கு தயரான நிலையில், எம். ஜி. ஆர்., ஜெயலலிதா, சான்டோ சின்னப்பதேவர் அவர்களுடன் இயக்குனர் ப. நீலகண்டன் இருக்கிறார்.

– நன்றி : முகநூல் பதிவு

You might also like